உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாத பராமரிப்பில் கவனம்

பாத பராமரிப்பில் கவனம்

நாய்களின் பாதங்கள் மேடு, பள்ளமாக இருப்பதால், இதன் இடுக்குகளில் மண்துகள் படிந்திருக்கும். வெளியிடங்களுக்கு சென்று, வீட்டிற்குள் வரும்போது, சுத்தமான துணி கொண்டு பாதங்களை துடைத்துவிட வேண்டும். இதை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டினால் பாக்டீரியா தொற்று உருவாகி, அவ்விடத்தில் அரிப்பை ஏற்படுத்தும். இதனால், நாய்கள் அடிக்கடி பாதத்தை கடிக்கலாம்.நகங்களை வெட்டிவிடுதல், நக இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கிவிடுதல் அவசியம். இதேபோல், பாதங்களை கழுவியபிறகு, தண்ணீர் முற்றிலும் துடைத்து காயவிட வேண்டும். பாத இடுக்குகளில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், பாக்டீரியா தொற்று உருவாகலாம்.அதீத எடை, அலர்ஜியால், சில சமயங்களில் பாத வெடிப்பு ஏற்படலாம். ஆலிவ், தேங்காய் எண்ணெய் கொண்டு, தினசரி பாதங்களை மசாஜ் செய்வதால், வெடிப்பு நீங்கும். இதற்கு, பிரத்யேக ஸ்பிரே, கடைகளில் கிடைக்கிறது.- டி. சிவக்குமார்,கால்நடை மருத்துவர், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ