உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதித்த கேம்போர்டு மாணவர்கள்

சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதித்த கேம்போர்டு மாணவர்கள்

கோவை;கோவை கேம்போர்டு சர்வதேச பள்ளி, சி.பி.எஸ்.இ., பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பள்ளியில், பிளஸ்2 தேர்வை எழுதிய 66 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 29 மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேலும், 24 மாணவர்கள் 80 சதவீதத்திற்கு மேலும், 13 மாணவர்கள் 70 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.மாணவர்கள், கோகுல் ராதாகிருஷ்ணன் 500க்கு 487, பிரணதி 486, மேகா லுானியா 484 மதிப்பெண்களுடன் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.இதேபோல், சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில், தேர்வு எழுதிய 84 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களில், 19 மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேலும், 28 மாணவர்கள் 80 சதவீதத்திற்கு மேலும், 24 மாணவர்கள் 70 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பிரணிகா 486, விகாசினி 483, ரோஷினி 483, ரிதன்யா 483, ரிதன்யா 475 ஆகியார் அதிக மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களை, பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, முதல்வர் பூனம் சாயல், ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ