உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் சிலைகள் சிறுமுகையில் பிரதிஷ்டை

விநாயகர் சிலைகள் சிறுமுகையில் பிரதிஷ்டை

மேட்டுப்பாளையம்;சிறுமுகையில் விவேகானந்தர் ஹிந்து பேரவை சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 21 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழாவை முன்னிட்டு, நேற்று சிறுமுகை மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள ஊராட்சிகளில், 21 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிஷ்டை செய்தனர். ஒவ்வொரு இடங்களிலும் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகளை செய்தனர். குறைந்தபட்சம் 3 அடி, அதிகபட்சம், 10 அடி உயரத்துக்கு விநாயகர் சிலைகள் வைத்துள்ளனர். சிறுமுகை தியேட்டர் மேட்டில், தலைமை விநாயகராக, 10 அடிக்கு கற்பக விநாயகர் சிலை வைத்து, பூஜைகள் செய்து வருகின்றனர். இன்று வீடுகளில் வைத்துள்ள விநாயகர் சிலைகளை, சிறுமுகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக தியேட்டர் மேட்டில் உள்ள கற்பக விநாயகர் சிலைக்கு எடுத்து வர உள்ளனர். மூன்றாம் நாள் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, 4:00 மணிக்கு விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பழத்தோட்டத்தில் பவானி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ