உள்ளூர் செய்திகள்

த.வெ.க., பொதுக்கூட்டம்

காரமடை: மேட்டுப்பாளையம் தொகுதி த.வெ.க., சார்பில், 100 நாள் சாதனை விளக்கம் பொதுக்கூட்டம் காரமடையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மேட்டுப்பாளையம் த.வெ.க., எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில வலைதள செய்தி தொடர்பாளர் தமிழன் ராகுல் காந்தி பங்கேற்றார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த் பேசுகையில், சட்டசபையில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலு, எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர், நம் முதல்வர் விஜயின் முன் பேசுவதை பார்க்கையில், காமெடியாக உள்ளது. நம் ஆட்சி சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம், தேசிய வெற்றிக் கழகமாக மாறும் அளவுக்கு, நாம் முன்னேறிப் போய்க் கொண்டிருக்கின்றோம். மக்களை தொடர்ந்து சந்தித்து, அவர்களது தேவைகளை அறிந்து நாம் பூர்த்தி செய்வோம், என்றார். இதில், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்புசாமி, நகர செயலாளர் பார்த்திபன், இணை செயலாளர் சாதனா, மேட்டுப்பாளையம் நகராட்சி கவுன்சிலர் சுனில் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். ----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை