உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹேண்ட்பால் பயிற்சி முகாம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹேண்ட்பால் பயிற்சி முகாம்

பெ.நா.பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு கோடைகால ஹேண்ட்பால் இலவச பயிற்சி முகாம் நடந்து வருகிறது.இப்பள்ளியில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஹேண்ட்பால் பயிற்சி, தினமும் காலை, மாலை இருவேளை இலவசமாக வழங்கப்படுகிறது.பயிற்சி அளித்து வரும் கோவை மாவட்ட கைப்பந்து கழக தலைவர் சந்தோஷ்குமார், செயலாளர் தனக்குமார், பயிற்சியாளர் சரவணன் ஆகியோர் கூறுகையில்,' பயிற்சியில் ஹேண்ட் பால் போட்டியின் பல்வேறு நுட்பங்கள் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றன. இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான ஹேண்ட் பால் விளையாட்டுப் போட்டியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி