உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் அரிசி பதுக்கல்; போலீசார் விசாரணை

ரேஷன் அரிசி பதுக்கல்; போலீசார் விசாரணை

பொள்ளாச்சி : ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட, 7வது வார்டில் உப்பிலியர் வீதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அப்பகுதியினர் பார்த்தனர். வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த போலீசார், வீட்டினுள் சென்று பார்த்த போது, 21 மூட்டைகளில், ஒரு டன், 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. வருவாய் துறையினர், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். வீட்டின் உரிமையாளர், மூட்டைகளை பதுக்கியது யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'கேரள மாநில எல்லையில் ஆனைமலை உள்ளதால், இங்கு ரேஷன் அரிசியை பதுக்கி வைக்கின்றனர். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை