உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் மாணவர் சந்திப்பு விருது வழங்கி கவுரவிப்பு  

முன்னாள் மாணவர் சந்திப்பு விருது வழங்கி கவுரவிப்பு  

பொள்ளாச்சி;பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் நடந்த முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டத்தில், சிறந்த முன்னாள் மாணவர்களுக்கான விருது வழங்கப்பட்டது.பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறைத் தலைவர் ஹரிதாஸ், ஆண்டறிக்கை வாசித்தார்.கல்லுாரித் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து, முன்னாள் மாணவர் சங்க முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், எஸ்.டி.சி., கல்லுாரி துணைத் தலைவர் வெங்கடேஷ், உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல் நந்தகுமார் ஆகியோருக்கு சிறந்த முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது.முன்னாள் மாணவர் சங்கத்துக்கு நிதியுதவி அளித்தனர். கல்லுாரி முதல்வர் சரவணபாபு, மேலாளர் ரகுநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் சங்க துணைத் தலைவர் மகாலிங்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை