உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ஹைபர் பார்க்

உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ஹைபர் பார்க்

கோவை:கோவை உக்கடம் புல்லுக்காடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், 'ஹைபர் பார்க்' திறக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் இந்தியா அறக்கட்டளை, ஏசியன் பெயின்ட்ஸ், கோவை மாநகராட்சி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கோவை குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கம் மற்றும் கோயம்புத்துார் விழா குழுவினர் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை, கோவை கலெக்டர் கிராந்திக்குமார் நேற்று திறந்து வைத்தார்.கோயம்புத்துார் விழா தலைவர் அருண் கூறுகையில், ''கோயம்புத்துார் விழா நவம்பர் 23 ம் தேதி முதல் டிசம்பர் 1 ம் தேதி வரை நடக்கிறது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பயன்பாட்டுக்காக, இந்த பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கட்டடங்களில் பிரமாண்டமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இங்குள்ள குழந்தைகளுக்கு ஓவிய ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கோயம்புத்துார் விழா சார்பில் இங்குள்ள குழந்தைகளுக்கும், அரசு பள்ளியில் மாணவர்களுக்கும் ஓவியப்போட்டி நடத்த இருக்கிறோம். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி, கோயம்புத்துார் விழாவில் நடக்கும் ஓவிய சந்தையில் பங்கேற்க வைக்க இருக்கிறோம். அது குறித்த அறிவிப்பை கலெக்டர் வெளியிட்டுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை