உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திட்டமிட்டு உழைத்தால் லட்சியம் நிறைவேறும்

திட்டமிட்டு உழைத்தால் லட்சியம் நிறைவேறும்

கோவை:கிணத்துக்கடவு, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியில், 2024-25ம் ஆண்டுக்கான, மாணவர்கள் தலைமை குழு பதவியேற்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, சின்னத்திரை புகழ் கோபிநாத் பேசுகையில், '' மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விடாமுயற்சியும், தன்னால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் மிகவும் அவசியம். திட்டமிட்டு உழைத்தால் மட்டுமே, லட்சியத்தில் வெற்றி பெற முடியும்,'' என்றார். புதிதாக பதவி ஏற்ற மாணவர்கள், தலைமை குழு உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். வரும் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விவரித்தனர். பல்வேறு கலை நிகழ்வுகளை மாணவர்கள் அரங்கேற்றினர்.கல்லுாரியின் முதல்வர் சுதா, மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் நந்தினி, தொழில்துறை நல்லுறவு இயக்குனர் கண்ணன் நரசிம்மன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை