உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்மிகம் பேசினால் கைது செய்யும் தி.மு.க., அரசு

ஆன்மிகம் பேசினால் கைது செய்யும் தி.மு.க., அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குன்னுார் : ''தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால் கைது செய்யும் தவறான செயலில் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.நீலகிரி மாவட்டம், குன்னுாரில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மத்திய இணை அமைச்சர் முருகன் அளித்த பேட்டி: கடந்த, 2ம் தேதி பிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார். உலகிலேயே அதிகமான உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி பா.ஜ.. தான். அதற்கு பிறகுதான் சீனா உள்ளிட்ட மற்ற கட்சிகள் உள்ளன. பா.ஜ.,வில், 10 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், நாடு முழுவதும், 11 கோடி உறுப்பினர்களையும், தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு பணிகள் நடந்து வருகிறது. தமிழக முதல்வர் ஏற்கனவே ஸ்பெயின், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றார். அதனுடைய முதலீடு என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர் கையெழுத்து இட்டதாக கூறும் நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் உள்ளன. இது ஒரு கண்துடைப்புக்கான பயணமாக உள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த முதலீடும் வரப்போவதில்லை. 'தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால் அவர்களை கைது செய்ய வேண்டும்,' என்ற தி.மு.க., அரசின் தவறான செயல் நடந்து வருகிறது. அவர் என்ன பேசினார் என்பதற்கு உள்ளே செல்ல நான் விரும்பவில்லை. எனினும், ஒரு நபர் பேசினார் என்ற ஒரே காரணத்திற்காக, கைது செய்யப்படுவது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.பா.ஜ., எந்த இடத்திலும் இந்தியை திணிப்பதில்லை. புதிய கல்வி கொள்கையானது ஆரம்ப கல்வியை தமிழ் உட்பட அந்தந்த மாநில தாய் மொழியில் கொண்டு வர வேண்டும் என்பது தான். தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கூறி வருகிறோம். தேயிலை விலை நிர்ணயம் தொடர்பாக விவசாயிகள் உற்பத்தியாளர்களுடன் மத்திய வர்த்தக அமைச்சரை சந்தித்து அதற்கான தீர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு முருகன் கூறினார்.முன்னதாக, குன்னுார் நகர பா.ஜ., செயலாளர் சரவண குமார் தலைமையில் காட்டேரி அருகே வரவேற்பு நிகழ்ச்சியில், டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்த அமைச்சர் முருகன், மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மாவட்ட தலைவர் மோகன்ராஜ், செயலாளர் ஈஸ்வரன், உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sugumar s
செப் 11, 2024 11:39

Sir DM is against only for Hindus. They have 100% support for Christianity and Islam. If they speak spirituality all DMs will clap with 100% joy. But Hindus should not speak spirituality. Hindus should awake and try to remove them in 2026. If Hindus follow the culture of Biriyani, quarter and 2000, even god cannot save them.


Matt P
செப் 11, 2024 11:33

அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒரு அமைச்சர் நினைத்தார் என்றால் யாரையும் கைதுக்குள்ளாக்க முடியும் என்று சட்டத்தில் இடம் இருக்கிறதா ? அப்படி இருக்கிறது என்றால் அது சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ப கைது செய்ய முடியும் என்று ஆகி விடாதா?


vbs manian
செப் 11, 2024 11:31

ஒரே தாய்க்கு பிறந்த குழந்தைகள் வெவ்வேறு வாழ்க்கை. ஒருவர் மகா புத்திசாலி. . மற்றும் ஒருவர் பெரிய கலைஞர். இன்னொருவர் விளையாட்டு வீரர். இன்னொருவர் உதவா அரசியல் வாதி. எப்படி அமைகிறது.


sridhar
செப் 11, 2024 10:34

பொதுவா சொல்லாதீங்க . திமுக மீது வீண் பழி போடாதீங்க . கிறிஸ்துவ இஸ்லாமிய ஆன்மிகம் பேசினால் ஆதரவு உண்டு.


MADHAVAN
செப் 11, 2024 10:33

உன்னை பத்தி எல்லாம் தெரியும் நீ வாய மூடிக்கிட்டு போ


Ksrinivasan Kbalaji
செப் 11, 2024 11:22

சுடாலினை ஆதரிக்கும் ஹிந்துக்களுக்கு சொரணை வரும். மஹாவிஷ்ணு என்ன தவறு செய்தார்?? சொல்லுங்கள்


Muralidharan raghavan
செப் 11, 2024 10:23

உண்மை கர்மா என்றும் ஒரு மனிதனை பின்தொடரும். தீதும் நன்றும் பிறர் தர வாரா


V RAMASWAMY
செப் 11, 2024 10:20

இனி தமிழகத்தில் ஆன்மிகம் கூடாது, நன்னடத்தை கூடாது, நற்செயல்கள், நல்லென்னங்காள் கூடாது. இனி அரசு விழாக்களில் மூட நம்பிக்கையாகும் எந்த வாழ்த்தும், தமிழ் தாய் வாழ்த்துக்கூட பாடக்கூடாது, கூட்டங்களில், விழாக்களில் கலந்துகொள்ளும் தி மு க எம் எல் ஏக்கள் , எம் பிக்கள், அவர்கள் குடும்பத்தினர் எவரும் விபூதியோ, குங்குமமோ அணியக்கூடாது, குடும்பத்தினர் வீடுகளில் பூஜை புனஸ்காரம் செய்யக்கூடாது, செய்தால் கைது செய்யப்படுவர். இம்மாதிரி அறிக்கைகள் கட்டளைகள் தி மு க வினர் வெளியிட தைரியமுண்டா? .


Sampath Kumar
செப் 11, 2024 09:48

இப்படி பேசின குண்டாக மண்டக்க ஹான் அடக்கும்


vbs manian
செப் 11, 2024 09:13

ஆன்மிகம் தமிழகத்தின் அசைக்க முடியா அடையாளம். எவ்வளவு சித்தர்கள் ஆன்மிக பெருமக்கள் இங்கு தோன்றி இந்த வாழ்க்கைக்கு அப்பால் ஏதேனும் உள்ளதா என்று ஆன்மிக வேள்வியில் மூழ்கி முத்துக்களை எடுத்து உறைதுள்ளனர். அழியா பொக்கிஷம். இந்த ஆலால விருக்ஷத்தை பகுத்தறிவு என்ற போலிக்குருவி கொத்தி பார்க்கிறது.


Rajkumar
செப் 11, 2024 09:05

ஆன்மீகம் எங்கே பேச வேண்டுமோ அங்கே போய் பேசுங்கள். யாரும் தடுக்க மாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை