உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதுப்பிக்கப்பட்ட நுாலக கட்டிடம் திறப்பு

புதுப்பிக்கப்பட்ட நுாலக கட்டிடம் திறப்பு

அன்னுார் : கஞ்சப்பள்ளியில் ஊராட்சி அலுவலகம் அருகே நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 5,000க்கும் மேற்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, வரலாறு, பொது அறிவு, ஜோதிடம், ஆன்மீகம் உள்ளிட்ட புத்தகங்கள் உள்ளன.இந்த நூலக கட்டடம் பல ஆண்டுகளானதால் மோசமான நிலையில் இருந்தது. இதையடுத்து ரோட்டரி கோயம்புத்தூர் ஜெனித் சங்கம் சார்பில், நூலகம் புதுப்பிக்கப்பட்டது. நூலக கட்டடத்தில் பராமரிப்பு பணி செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வசந்த் சண்முகம் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், உதவி கவர்னர் ராஜன் ஆறுமுகம், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர் புதுப்பிக்கப்பட்ட இந்த நூலகத்தை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என நிகழ்ச்சியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !