உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வருமான வரித்துறை சார்பில் 140 யூனிட் ரத்தம் சேகரிப்பு

வருமான வரித்துறை சார்பில் 140 யூனிட் ரத்தம் சேகரிப்பு

கோவை; கோவை மண்டல வருமான வரித்துறை மற்றும் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில், சித்தாபுதுாரில் உள்ள வருமான வரித்துறை மற்றும் கலால் வரித்துறை அலுவலர்கள் குடியிருப்பு வளாகத்தில், நேற்று ரத்த தான முகாம் நடந்தது. கோவை மண்டல வருமான வரித்துறை தலைமை கமிஷனர் அருண் பரத், முகாமை துவக்கி வைத்தார்.வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், 'அன்னை கரங்கள்' அமைப்பு, பி.எஸ்.ஜி.,கல்லுாரி, குமரகுரு கல்லுாரி, யுனைடெட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் பார்மஸியை சேர்ந்த மாணவர்கள், இந்திய பட்டயக் கணக்காளர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் ரத்த தானம் செய்தனர். மொத்தம், 140 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது. ரத்த தானம் வழங்கியவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ