மேலும் செய்திகள்
காலமானார் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
20 minutes ago
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
38 minutes ago
ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்
1 hour(s) ago
அசத்தலான அசைவ விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்
1 hour(s) ago
போத்தனுார் : கோவையில் தனியார் மருத்துவ குழுமத்துக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.கோவை, சிங்காநல்லூரை சேர்ந்த முத்து சரவணன், 45, 'முத்துாஸ்' எனும் பெயரில், சரவணம்பட்டி, சிங்காநல்லூரில் மருத்துவமனைகள் நடத்தி வருகிறார். மதுக்கரையில் செட்டிபாளையம் சாலை பிரிவு அருகே, முத்துாஸ் ஹெல்த் சயின்ஸ் எனும் கல்லுாரி நடத்தி, தற்போது மூடப்பட்டுள்ளது. நேற்று காலை இரு மருத்துவமனைகள், வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். தொடர்ந்து மாலை, 4:00 மணி முதல் மூடப்பட்ட கல்வி நிறுவனத்தில், 15 பேர் கொண்ட குழுவினர், மூன்று வாகனங்களில் வந்து சோதனை மேற்கொண்டனர். இரவு, 10:15 மணி வரை இச்சோதனை நீடித்தது. அப்போது, முத்துசரவணனிடமும் விசாரணை நடந்தது. சோதனை முடிவில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. சோதனை குறித்து விசாரித்தபோது மருத்துவ குழுமத்துக்கு சொந்தமான ஒரு இடத்தில், பதுக்கி வைக்கப்பட்ட, பல கோடி ரூபாய் ரொக்கம் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தொகை எவ்வழியில் வந்தது, அரசியல்வாதிகளால் வாக்காளர்களுக்கு தர வைக்கப்பட்டிருந்ததா என விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், வருமான வரித்துறையினர் சோதனை குறித்த விபரங்களை கூறவில்லை. இது குறித்து வருமான வரித்துறையிடம், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பல்வேறு ஆதாரங்களை கேட்டுள்ளனர். மருத்துவ குழுமத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட தொகை, ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அவரது பினாமிகள் வாயிலாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இச்சோதனை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
20 minutes ago
38 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago