உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனை பட்டா கேட்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

மனை பட்டா கேட்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை:கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், வீட்டுமனைபட்டா கேட்டு மட்டும், 257 மனுக்கள் வந்தன. வழக்கமாக வரும் மனுக்களை காட்டிலும், நேற்று நடந்த குறை தீர் முகாமில் வந்த மனுக்களின் எண்ணிக்கை வித்தியாசமாக இருந்தது.இலவச வீடு கேட்டு, 98 மனுக்களும், வீட்டுமனைப் பட்டா கேட்டு, 257 மனுக்களும், வேலைவாய்ப்பு கேட்டு,7 மனுக்களும், 188 இதர மனுக்கள் என மொத்தம், 550 மனுக்கள் வந்தன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர் கிராந்திகுமார், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி, விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ