உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுதந்திர தின பைக் பேரணி; அனுமதி மறுப்பதாக புகார்

சுதந்திர தின பைக் பேரணி; அனுமதி மறுப்பதாக புகார்

கோவை : கோவையில், வாய்ஸ் ஆப் கோவை அமைப்பினர், சுதந்திர தினத்தில், பைக் பேரணிக்கு முறையாக விண்ணப்பித்தும், போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.வாய்ஸ் ஆப் கோவை அமைப்பினர், சுதந்திர தினத்தை ஒட்டி, இன்று (ஆக.,15) ஆர்.எஸ்.புரம், கிழக்கு திருவேங்கடசாமி ரோட்டில் உள்ள தி சேவாஸ்ரம் டிரஸ்டில் இருந்து, இருசக்கர பேரணி செல்ல அனுமதி கோரி, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மனு அளித்தனர். இந்நிலையில் பேரணிக்கு, அனுமதி இல்லை என, போலீசார் தெரிவித்துள்ளனர்.வாய்ஸ் ஆப் கோவை நிர்வாகிகள் கூறுகையில், 'மேம்பால பணிகள் நடைபெறுவதால், சாலைகள் மிகவும் குறுகலாகவும் உள்ளன. மேலும், ஒரு சில இடங்களில் சாலை பராமரிப்பு பணிகளும், குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளும் நடந்து வருவதால், பைக் பேரணி நடத்தும் பட்சத்தில், பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனக்கூறி, போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்' என்றனர்.போலீஸ் உதவி கமிஷனர் ரவிக்குமாரிடம் கேட்டபோது, ''மாநகரில் பல்வேறு அமைப்புகள் அனுமதி கேட்டுள்ளனர். யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதே முக்கிய காரணமாக குறிப்பிட்டுள்ளோம். இருப்பினும், நாளை (ஆக.,15ம் தேதி) மேல் அதிகாரிகளிடம் கேட்டு, தெரிவிக்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ