உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை தியேட்டர்களுக்கு மீண்டும் வந்த இந்தியன் தாத்தா!

கோவை தியேட்டர்களுக்கு மீண்டும் வந்த இந்தியன் தாத்தா!

கடந்த 1996ம் ஆண்டு, இயக்குனர் சங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் 'இந்தியன்' திரைப் படம் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. 28 ஆண்டுகள் கழித்து, இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு, தற்போது வெளியாகியுள்ளது. கோவையில், 22 தியேட்டர்களில் படம் திரையிடப் பட்டுள்ளது.கோவையை சேர்ந்த உதயகுமார் கூறுகையில், ''கமல் வரும் ஒவ்வொரு காட்சியும் சிலிர்க்க வைக்கிறது. முதல் பாகத்தில் சொல்லப்பட்ட கருவையே மையப்படுத்தி, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப, இயக்குனர் மிரட்டியுள்ளார்.ஊழலுக்கு எதிராக, நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று திரைப்படம் சொல்கிறது. ரசிக்கும்படியாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்துக்கு தேவையான படம் இது,'' என்றார்.கோவையை சேர்ந்த குமார் கூறுகையில், ''நடிப்பில் கமல் எப்படி அசத்தியிருப்பார் என்று எல்லோருக்கும் தெரியும். சிறப்பாக நடித்திருக்கிறார். வயதான தோற்றத்தில் உடல் மொழியை சிறப்பாக கையாண்டிருக்கிறார். ''படம் முடியும் போது, மூன்றாம் பாகத்துக்கான ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறார்கள். அடுத்த பாகத்துக்கான ஆவல் அதிகரித்திருக்கிறது,'' என்றார்.கோவை கே.ஜி., திரையரங்கு மற்றும் பூ மார்க்கெட் அர்ச்சனா திரையங்கில், சிறப்பு காட்சி முடித்து வந்த ரசிகர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் சார்பில், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை