உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் வழிதடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

கோவில் வழிதடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கனககிரி வேலாயுத சுவாமி கோவில் பின்பக்க வழிதடம் சேதமடைந்து உள்ளதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவில் உள்ள, பிரசித்தி பெற்ற கனககிரி வேலாயுத சுவாமி கோவில், 700 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. மலை மீது முருகப்பெருமான் இருப்பதால் அதிகப்படியான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நடக்க முடியாத நபர்கள் மலை கோவிலின் பின் பகுதியில் உள்ள, ரோட்டின் வழியாக வாகனத்தில் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர். ஆனால், தற்போது தார் ரோடு மண் ரோடாக மாறி சிதிலமடைந்துள்ளது. இவ்வழியில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், மிகக்கவனமாக செல்ல வேண்டும். இல்லாவிட்டால், சறுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி, இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ