உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் ஆவணம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் ஆவணம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

கோவை;தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் வரும் ஆக., 21க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.கோவை மாநகர போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தீபாவளியை முன்னிட்டு தற்காலி பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் வரும் ஆக., 21ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, விண்ணப்ப படிவம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பட்டாசு இருப்பு வைத்து விற்கப்படவுள்ள இடத்தின் வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தியேட்டர் போன்ற இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்க கூடாது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து உரிமம் வழங்கப்படும் என, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி