உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொசு ஒழிப்பு பணி தீவிரம்; களப்பணியில் 83 பணியாளர்கள்

கொசு ஒழிப்பு பணி தீவிரம்; களப்பணியில் 83 பணியாளர்கள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் டெங்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கூடுதலாக கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பொள்ளாச்சியில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒவ்வொரு வார்டிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வகையில், 83 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள், தினமும் காலை முதல் மதியம் வரை, அந்தந்த வார்டுகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக செல்கின்றனர். வீட்டின் முன்புறம் உள்ள டயர், தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல் ஆகியவற்றில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர்.தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் டெங்கு கொசுக்கள் வளராத வகையில், 'அபேட்' மருந்து தெளிக்கின்றனர். மேலும், கொசு உற்பத்தி ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, வீட்டு உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.மேலும், மாலை நேரத்தில் நகரப்பகுதியில் வாகனத்தில் சென்று கொசு ஒழிப்புக்கு புகை மருந்து அடிக்கின்றனர். இதனால், ஓரளவுக்கு கொசு கட்டுப்படுகிறது.நகராட்சி சுகாதாரத்துறையினர் கூறியதாவது:மழையால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளுக்கு சென்று கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.தற்போது, ஒருவருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அவரின் குடியிருப்பு பகுதியில் 'மாஸ் கிளீனிங்' செய்யப்பட்டது. வேறு எவருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பில்லை.காய்ச்சல் பாதிப்பு இருந்தால், டாக்டரிடம் உரிய பரிசோதனை செய்து மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை