உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈஷா யோகா வகுப்பு நாளை நடக்கிறது

ஈஷா யோகா வகுப்பு நாளை நடக்கிறது

அன்னுார்:அன்னுாரில் ஈஷா யோகா வகுப்பு நாளை முதல் ஜூன் 4ம் தேதி வரை இலவசமாக நடைபெறுகிறது.அன்னுாரில் உள்ள கே.ஜி.மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஈஷா சார்பில் இலவச யோகா வகுப்பு நாளை முதல் ஜூன் 4ம் தேதி வரை 7 நாட்களுக்கு இலவசமாக நடைபெறுகிறது. ஈஷாவில் இருந்து யோகா ஆசிரியர்கள் வருகை புரிந்து யோகா பயிற்சி அளிக்க உள்ளனர். இரண்டு அமர்வுகளாக இந்த பயிற்சி நடைபெற உள்ளது. காலை 6 மணி முதல் 8.30 மணி வரை ஒரு அமர்வும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி ஒரு அமர்வும் நடைபெறுகிறது.யோகா பயிற்சி மேற்கொள்வதால் உணர்ச்சி சமநிலை, தன்னம்பிக்கை, மனத்தெளிவு உள்ளிட்டவைகள் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை