உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெயில் காலத்திலும் தலைதுாக்கும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது அவசியம்

வெயில் காலத்திலும் தலைதுாக்கும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது அவசியம்

கோவை;கொசு மருந்து அடிப்பதில் தொய்வு உள்ளிட்ட காரணங்களால், வெயில் காலத்திலும் டெங்கு பாதிப்பு தலைதுாக்கி வருகிறது; நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்த வேண்டியது அவசியம்.பருவ மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் இருந்து, டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் 'ஏடிஸ்' கொசு உற்பத்தி அதிகமாக இருக்கும். தற்போது, மழை பொய்த்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது.கோவையில் தினமும், 100 டிகிரிக்கு மேல் என வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பொதுவாக வெயில் காலத்தில், டெங்கு கொசு உற்பத்தி குறைவாக இருக்கும்.அதேசமயம், கொசு மருந்து அடிப்பது, 'அபேட்' மருந்து தெளிப்பது போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தால் மட்டுமே, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும்.ஆனால், வார்டுக்கு, 5 லிட்டர் கொசு மருந்து மட்டுமே வழங்கப்படுவதால் போதுமானதாக இல்லை என்கின்றனர் கவுன்சிலர்கள்.தற்போது, வடக்கு மண்டலம், 15வது வார்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொசு மருந்து அடிப்பது, வீடுதோறும் 'அபேட்' மருந்து தெளிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கிழக்கு மண்டலம், 58வது வார்டு எஸ்.என்.ஆர்.நகர், நந்தா நகர், 60வது வார்டு உப்பிலிபாளையம் பகுதிகளில் தற்போது கொசு தொல்லை அதிகரித்து வருகிறது.15வது வார்டு ஜி.என்.மில்ஸ், காந்தி நகர் பகுதிகளில் கொசு மருந்து அடிக்காததால், தற்போது டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு, தலைகாட்டிய கவுன்சிலர்கள் பலர், தற்போது வார்டு பக்கமே வருவதில்லை என்பது, பொது மக்களின் குமுறலாக உள்ளது.எனவே, கொசு மருந்து அளவை அதிகரிப்பதுடன், நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மாநகராட்சி தீவிரப்படுத்த வேண்டியது அவசியம்.

'நோய் தடுப்பு பணி தீவிரம்'

மாநகராட்சி நகர்நல அலுவலர் பூபதி கூறுகையில், ''மாநகராட்சி பகுதிகளில் தற்போது டெங்கு பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. தினமும் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே டெங்கு பாதிப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொசு ஒழிப்பு பணியாளர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவையான அளவு கொசு மருந்தும் வார்டுகளுக்கு வழங்கப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி