உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செக் மோசடி வழக்குபல் டாக்டருக்கு சிறை

செக் மோசடி வழக்குபல் டாக்டருக்கு சிறை

கோவை;சாய்பாபாகாலனியை சேர்ந்த டெக்ஸ்டைல் மில் உரிமையாளர் கிருஷ்ணகுமாரிடம், பீளமேட்டை சேர்ந்த பல் மருத்துவர் சங்கீத்,37 கடந்த 2015, டிச., 3ல், 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். பணத்தை திருப்பி கேட்ட போது, கிருஷ்ண குமாருக்கு வங்கி காசோலை கொடுத்தார். பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்தது.பாதிக்கப்பட்ட கிருஷ்ண குமார் தரப்பில், அவரது வக்கீல் ஏ.பி.ஜெயச்சந்திரன், கோவை இரண்டாவது விரைவு கோர்ட்டில், செக் மோசடி வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி சத்யா, குற்றம் சாட்டப்பட்ட சங்கீத்திற்கு, ஆறு மாதம் சிறை, பாதிக்கப்பட்டவருக்கு, 15 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ