உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜெயகாந்தன், புதுமைபித்தன் விருதுகள் அறிவிப்பு

ஜெயகாந்தன், புதுமைபித்தன் விருதுகள் அறிவிப்பு

கோவை, : உலக புத்தக தினத்தை முன்னிட்டு, கோவை விஜயா பதிப்பகம் வாசகர் வட்டம் சார்பில், இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், மீரா, புதுமைப்பித்தன் ஆகியோரின் பெயரில், எழுத்தாளர்களுக்கு விருதும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, சிறந்த விற்பனையாளருக்கு வானதி விருதும், சிறந்த நுாலகருக்கு சக்தி.வை.கோவிந்தன் விருதும் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான ஜெயகாந்தன் விருது, வாணியம்பாடியை சேர்ந்த எழுத்தாளர் மு.குலசேகரனுக்கும், புதுமைப்பித்தன் விருது நாமக்கலை சேர்ந்த எழுத்தாளர் குமாரநந்தனுக்கும், மீரா விருது திருநெல்வேலியை சேர்ந்த கவிஞர் மதார் ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.சிறந்த புத்தக விற்பனையாளருக்கான வானதி விருது, தென்காசி வீரசிவாஜி புத்தக உலகம் சுகுமாருக்கும், சிறந்த நுாலகருக்கான சக்தி.வை.கோவிந்தன் விருது, செங்கோட்டை முழுநேர அரசு நுாலகத்தின் மூன்றாம் நிலை நுாலகர், ராமசாமிக்கும் வழங்கப்படுகிறது. உலக புத்தக தினமான வரும் ஏப்ரல் 27ம் தேதி, பேரூர் தமிழ் கல்லுாரி வளாகத்திலுள்ள, முத்தமிழ் அரங்கத்தில் நடக்கும் விழாவில், விருதுகள் வழங்கப்பட உள்ளன.இந்த தகவலை, விஜயா பதிப்பகம் உரிமையாளர் வேலாயுதம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை