உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்பனா சாவ்லா வாசிப்பு இயக்க நிகழ்வு; பள்ளியில் அறிவியல் கலந்துரையாடல்

கல்பனா சாவ்லா வாசிப்பு இயக்க நிகழ்வு; பள்ளியில் அறிவியல் கலந்துரையாடல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்பனா சாவ்லா வாசிப்பு இயக்கம் சார்பில் நுால் வாசிப்பு நிகழ்வு நடந்தது.பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்பனா சாவ்லா வாசிப்பு இயக்கத்தின் முதல் நிகழ்வு நடந்தது. தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை கீதா, பல்வேறு வகையான அறிவியல் நுால்களை மாணவர்களுக்கு கொடுத்து ஒரு மணி நேரம் தொடர் வாசிப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.'வாசிப்பை நேசிப்போம்; வாசிப்பே சுவாசிப்போம்' என்று வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அதன்பின், நுால் வாசித்தல் ஏன், எதற்கு, எப்படி? என, காரண விளக்கத்துடன் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.நுாலகங்களுக்கு சென்று பல்வேறு வகையான நுால்களை வாசிப்பதன் வாயிலாக, பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், பல வகையான போட்டித்தேர்வுகளை எதிர்கொண்டு சமுதாயத்தில் நல்ல மாணவர்களாக திகழ முடியும் என கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.அதில், 50 வகையான அறிவியல் நுால்களை மாணவர்கள் வாசித்து, அதன் கருத்துக்களை விளக்கும் விதமாக கலந்துரையாடல் நிகழ்ந்தது.முன்னோர்கள் முட்டாள்களா? எங்கும் எதிலும் இயற்பியல், பெண் விஞ்ஞானிகள், ஸ்டீபன் ஹாக்கிங், மேரி கியூரி, குழந்தை பருவத்தில் விஞ்ஞானிகள் போன்ற பல்வேறு வகையான அறிவியல் நுால்களை வாசித்து, கலந்துரையாடல் வாயிலாக கண்டுபிடிப்புகள் சாதனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மாதம் ஒருமுறை கல்பனா சாவ்லா வாசிப்பு இயக்கம் தொடர்ந்து நடைபெறும், என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை