| ADDED : ஜூலை 30, 2024 11:13 PM
கோவை;மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் கமலம் அணியினர் முதலிடம் பிடித்தனர். 'பிரவீன் நினைவு கோப்பை' என்ற பெயரில் மாநில அளவிலான இரட்டையருக்கான இறகுப்பந்து போட்டி கவுண்டம்பாளையம் 'கொலிசியம்' இறகுப்பந்து கோர்ட்டில் நடந்தது. இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 105 அணிகள் பங்கேற்றன. இதில் ' ஜம்புல்டு பியூர்' மற்றும் நான் மெடலிஸ்ட் ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன. இதன் 'நான் மெடலிஸ்ட்' பிரிவில் 56 அணிகள் பங்கேற்றன. சரவணன் மற்றும் ராமசந்திரன் (கமலம்) அணியினர் முதலிடம் பிடித்தனர். இரண்டாம் இடத்தை ஆதி இறகுப்பந்து அகாடமி வீரர்கள் சந்தோஷ், கணேஷ் ஆகியோர் பிடித்தனர். ஜம்புல்டு பியூர் பிரிவில் பங்கேற்ற 49 அணிகளில் வி2 இறகுப்பந்து அகாடமியை சேர்ந்த கிருஷ்ணா, சுரேஷ் ஆகியோர் முதலிடத்தையும், ஜே.பி.சி., அணியை சேர்ந்த பிரமே், சஞ்சீவ் ஜோடி இரண்டாமிடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், கோப்பை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை பிரவீன் நினைவு கோப்பை ஒருங்கிணைப்பாளர்கள் ரவி சங்கர், சந்தோஷ் குமார், சபாபதி ஆகியோர் செய்திருந்தினர்.