உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில கபடி போட்டியில் கற்பகம் பல்கலை சாம்பியன்

மாநில கபடி போட்டியில் கற்பகம் பல்கலை சாம்பியன்

கோவை:ஈரோடு மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான ஓபன் கபடி போட்டியில், கற்பகம் பல்கலை அணி சாம்பியன் கோப்பையை வென்றது.மாநில அளவிலான ஓபன் கபடி போட்டி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் ஏப்., 28, 29 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 80க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று, 'நாக் அவுட்' முறையில் போட்டியிட்டன. கற்பகம் பல்கலை அணி அரையிறுதிப்போட்டியில், வானம்பாடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை 24 - 12 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலை அணி, மேட்டுப்பாளையம் அன்புத்தம்பி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை எதிர்த்து விளையாடியது.இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கற்பகம் அணி, ஆட்ட நேர முடிவில், 34 - 28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற மாணவர்களை, கற்பகம் பல்கலையின் துணை வேந்தர் வெங்கடாஜலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் மற்றும் பயிற்சியாளர் கோவிந்தராஜூ ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை