உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்மாநில வாலிபால் போட்டியில் கற்பகம் பல்கலைக்கு இரண்டாமிடம்

தென்மாநில வாலிபால் போட்டியில் கற்பகம் பல்கலைக்கு இரண்டாமிடம்

கோவை;தஞ்சாவூரில் நடந்த தென் மாநில அளவிலான வாலிபால் போட்டியில், கற்பகம் பல்கலை அணி இரண்டாமிடம் பிடித்தது. தஞ்சாவூர் அத்திவெட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 29ம் ஆண்டு தென் மாநில அளவிலான இன்விடேஷனல் வாலிபால் போட்டி நடந்தது. இதில், பல்வேறு கல்லுாரி மற்றும் கிளப் அணிகள் பங்கேற்றன.லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்த போட்டியில், சிறப்பாக விளையாடிய கற்பகம் பல்கலை அணி அரையிறுதியில், சென்னை டி.பி.ஜெயின் கல்லுாரி அணியை, 3 - 0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலை அணி, சென்னை லயோலா கல்லுாரி அணியை எதிர்த்து விளையாடியது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில், இரு அணி வீரர்களும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இறுதியில், லயோலா கல்லுாரி அணி 3 - 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. கற்பகம் பல்கலை அணி இரண்டாமிடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களை, கற்பகம் பல்கலை துணைவேந்தர் வெங்கடாசலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி