கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்
கோவை:கோவை அரசூரில் உள்ள கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் முதலாமாண்டு வகுப்புகள் நேற்று துவங்கியது. மாணவர்கள், உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். துவக்கவிழா நிகழ்வு, 'இன்செப்ஷன்-24' உற்சாகமாக துவங்கியது. கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் ராமசாமி தலைமையில் முதல்நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. கார்கில் நிறுவனத்தின் சர்வதேச மனிதவள தலைவர் நடராஜ பெருமாள், ஆரக்கல் நிறுவனத்தின் துணை தலைவர் பாலாஜி துரைசாமி ஆகியோர் குத்து விளக்கேற்றினர். கார்கில் நிறுவனத்தின் சர்வதேச மனிதவள தலைவர் நடராஜ பெருமாள் கல்லுாரி முதல் நாளிலிருந்து, மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளவேண்டிய திறன்கள், தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தார். துவக்கவிழா நிகழ்வில், கல்லுாரி முதல்வர் சரவணன் , சக பேராசிரியர்கள், பெற்றோர் அனைவரும் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் இக்கல்லுாரி மாணவர்கள் தயாரித்த ரோபோ வரவேற்றது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.