உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோழிக்கோடு விமானங்கள் கோவையில் தரையிறக்கம்

கோழிக்கோடு விமானங்கள் கோவையில் தரையிறக்கம்

கோவை:கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, வளைகுடாவில் இருந்து, கோழிக்கோடு வந்த இரு விமானங்கள், கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.சவுதி அரேபியாவின் தம்மம் நகரில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு வந்த விமானம், நேற்று காலை 7:35 மணிக்கு தரையிறங்க வேண்டும். அதேபோன்று, துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம், காலை 7:45 மணிக்கு தரையிறங்க வேண்டும்.கோழிக்கோட்டில் பெய்த கனமழை காரணமாக, ஓடுபாதை சரியாக தெரியாததால், பாதுகாப்பு கருதி, இரு விமானங்களும் கோவை சர்வதேச விமானநிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன. கோவையில் தரையிறங்கிய இரு விமானங்களும், வானிலை சரியானதும் சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, கோழிக்கோடு புறப்பட்டுச் சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை