உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு மாத போராட்டத்துக்கு பிறகு கோர்ட்டில் ஆஜரான வக்கீல்கள்

ஒரு மாத போராட்டத்துக்கு பிறகு கோர்ட்டில் ஆஜரான வக்கீல்கள்

கோவை: ஒரு மாத தொடர் போராட்டத்திற்கு பிறகு, நேற்று முதல் வக்கீல்கள் கோர்ட்டுக்கு திரும்பினர்.மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வக்கீல்கள் ஜூலை, 1 முதல் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு சார்பில் (ஜேக்), டில்லிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் தொடர்ந்து புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை முற்றிலும் பாதிக்கப்பட்டது.இந்நிலையில், தொடர் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது எனவும், 5ம் தேதி முதல், கோர்ட்டிற்கு செல்வது எனவும், திருவண்ணாமலையில் நடந்த 'ஜேக்' பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கோவையில் நேற்று அனைத்து வக்கீல்களும் கோர்ட்டுக்கு திரும்பினர். இதனால் நீதிமன்ற வளாகம்பரபரப்பாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி