| ADDED : ஜூலை 23, 2024 12:06 AM
அன்னுார்;வருகிற 29ம் தேதி டில்லியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க அன்னுார் வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், என, வலியுறுத்தி, பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன்படி அன்னுார் கோர்ட்டில் கடந்த 1ம் தேதி முதல் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்து வருகின்றனர். 22வது நாளாக நேற்றும் வக்கீல்கள் அன்னுாரில் கோர்ட் பணியில் பங்கேற்கவில்லை. இதனால் பெரும்பாலான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன இதையடுத்து நடந்த அன்னுார் வக்கீல்கள் சங்க பொதுக்குழுவில் வருகிற 29ம் தேதி டில்லியில் வழக்கறிஞர்கள் நடத்தும் அறப்போராட்டத்தில் அன்னுாரில் இருந்து பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.இக்கூட்டத்தில் அன்னுார் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர் சிவ பார்த்தசாரதி, செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.