மேலும் செய்திகள்
வக்கீல்கள் உண்ணாவிரதம்
01-Mar-2025
கோவை; கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், வக்கீல் சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம்நடந்தது. வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டுக்குழு தலைவர் நந்த குமார் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்ற வக்கீல்கள், வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதா அமலுக்கு வந்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கி பேசினர். வக்கீல்கள் சேம நல நிதியை 25 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும், உயர்த்தப்பட்ட சேமநல முத்திரை கட்டணத்தை, வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
01-Mar-2025