உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுத்தை குட்டி பலி; வனத்துறை விசாரணை

சிறுத்தை குட்டி பலி; வனத்துறை விசாரணை

வால்பாறை : வால்பாறையில், மர்மான முறையில் சிறுத்தை குட்டி இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.வால்பாறை காமராஜ் நகரில், 4 மாத ஆண் சிறுத்தை குட்டி மர்மான முறையில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்த வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தை குட்டியை மீட்டனர்.வனத்துறை கால்நடை உதவி மருத்துவர் விஜயராகவன், கால்நடை டாக்டர் செந்தில்நாதன் ஆகியோர் இறந்த சிறுத்தை குட்டியை பிரேத பரிசோதனை செய்த பின், சம்பவ இடத்திலேயே எரியூட்டப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில், 'தாயை பிரிந்த குட்டி உணவு தேட முடியாமல் இறந்திருக்கலாம். வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது பிரேத பரிசோதனை முடிவு வந்த பின் தெரியவரும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி