மேலும் செய்திகள்
நல்ல பலன் தரும் கண்ணாடி உரம்
06-Mar-2025
மேட்டுப்பாளையம்; காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறியதாவது:- ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க திரவ இயற்கை உரம் அவசியம். இந்த உரம் மானிய விலையில், வேளாண் விரிவாக்கம் மையங்களில், விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திரவ இயற்கை உரம் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் இலைவழி தெளிப்பாக தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு திரவ இயற்கை உரம் வழங்குவதற்கு ரூ.700 மற்றும் உரம் இடுதல் செலவு ரூ.700 ஆக மொத்தம் செலவு ரூ. 1,400. இதில் 50 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.700 வழங்கப்பட்டு வருகிறது.காரமடை வட்டாரத்திற்கு 650 ஏக்கருக்கு இலக்கீடு பெறப்பட்டு தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை காரமடை வட்டார விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
06-Mar-2025