உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால காலேஸ்வரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா

கால காலேஸ்வரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா

கோவில்பாளையம், ; கால காலேஸ்வரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா நடக்கிறது.கோவில்பாளையத்தில் பாடல் பெற்ற, கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படும், காலகாலேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழா நாளை (26ம் தேதி) நடைபெறுகிறது.நாளை இரவு 7:00 மணிக்கு முதல் கால ருத்ர ஹோம பூஜை துவங்குகிறது. இரவு 9:00 மணிக்கு முதற்கால அபிஷேக பூஜை நடக்கிறது. இரவு 10:00 மணி, மறுநாள் அதிகாலை 2:00 மணி, 4:00 மணிக்கு ருத்ர ஹோம பூஜை நடக்கிறது. இரவு 11:00 மணி மறுநாள் அதிகாலை 3:00 மணி, அதிகாலை 5:00 மணிக்கு அபிஷேக பூஜை நடைபெறுகிறது. 108 சங்கு பூஜையும் நடைபெறுகிறது. பக்தர்கள் விழாவில் பங்கேற்று இறையருள் பெற கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் மாலை 6:00 மணிக்கு பரதநாட்டியம் நடக்கிறது. இரவு 7:00 மணி முதல் மறுநாள் காலை 3:30 மணி வரை நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 10:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4:00 மணி வரை பஜனை நடைபெறுகிறது. கஞ்சப்பள்ளி தேனீஸ்வரர் கோவிலில் இரவு 7:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5:00 மணி வரை சிறப்பு பூஜை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி