உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மொபைல் போன்கள் திருடிய நபர் கைது

மொபைல் போன்கள் திருடிய நபர் கைது

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் மொபைல் போன்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ., ரோட்டில் மொபைல் போன் கடை உள்ளது. உரிமையாளர் அம்சராஜ் வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தார். கடையின் முன்பக்க ஷெட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடைக்குள் இருந்த மொபைல் போன்களில் இரண்டு மொபைல் போன்கள் காணாமல் போய் இருந்தது.இது குறித்து அம்சராஜ், பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் திருடிய நபரின் உருவம் பதிவாகி இருந்தது. அவர் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கார்த்தி, 28, என, தெரிய வந்தது. அவரிடமிருந்து மொபைல் போன்களை கைப்பற்றி, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !