உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண்டல லான் டென்னிஸ் கேந்திரிய வித்யாலயா பேஷ்

மண்டல லான் டென்னிஸ் கேந்திரிய வித்யாலயா பேஷ்

கோவை: சென்னையில் நடந்த மண்டல அளவிலான லான் டென்னிஸ் போட்டியில், கோவை கேந்திரிய வித்யாலயா மாணவர்கள், பதக்கங்கள் வென்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான, மண்டல அளவிலான லான் டென்னிஸ் போட்டி திருச்சியில் நடந்தது. மாணவ - மாணவியருக்கு 14, 17 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து, பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவியர் இறுதிப்போட்டியில், கோவை கேந்திரிய வித்யாலயா மாணவி நிமிஷா, 8 - 1 என்ற புள்ளிக்கணக்கில் சென்னையை சேர்ந்த சின்சனா பாட் என்ற மாணவியை வீழ்த்தி, முதலிடம் பிடித்தார். இதேபோல், மாணவர்களுக்கான 14 வயது பிரிவு இறுதிப்போட்டியில், கோவை கேந்திரிய வித்யாலயா மாணவர் பிரணவ், 8 - 4 என்ற புள்ளிக்கணக்கில், சூலுார் கேந்திரிய வித்யாலயா மாணவர் நிகில் அபிமன்யுவை வீழ்த்தி, முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்ற இருவரும், தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ