மேலும் செய்திகள்
செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
19-Aug-2024
செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
19-Aug-2024
அன்னுார்:அன்னுாரில், மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. அன்னுார், கோவை சாலையில், சி.டி.சி., டெப்போ எதிர்ப்புறம் மங்கள விநாயகர் கோவில் உள்ளது. இக் கோவிலில் புதிதாக கருவறை மற்றும் கோபுரம் அமைக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து கடந்த 19ம் தேதி முளைப்பாரி இடும் நிகழ்ச்சி நடந்தது. வரும் 29ம் தேதி மாலை விநாயகர் வழிபாடு, முதல் கால வேள்வி பூஜை, எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. வரும் 30ம் தேதி அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 8:30 மணிக்கு கோபுரம் மற்றும் மங்கள விநாயகருக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. இதையடுத்து விநாயகருக்கு, மகா அபிஷேக பூஜை, தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை அன்னுார் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
19-Aug-2024
19-Aug-2024