உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரத்தினம் கல்லுாரியில் நிபுணர்களுடன் சந்திப்பு

ரத்தினம் கல்லுாரியில் நிபுணர்களுடன் சந்திப்பு

கோவை : ஈச்சனாரி, ரத்தினம் தொழில்நுட்ப வளாகம், 'ஆர்.டி.சி., இண்டஸ்ட்ரி கனெக்ட்' என்ற பெயரில், தொழில்துறையினர் உடனான சந்திப்பை நடத்தியது.'கல்வி பாடத்திட்ட மேம்பாட்டிற்கான தொழில்துறை நுண்ணறிவு' என்பதை மையமாகக் கொண்டு இந்நிகழ்வு நடத்தப்பட்டது.இதில், முன்னணி தொழில்துறை நிபுணர்களை ஒன்றிணைக்கப்பட்டு,தொழில் துறை தேவைகளை பூர்த்தி செய்ய கல்வியாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.ரத்தினம் குழுமத்தின் துணைத் தலைவர் நாகராஜ், நிறுவனங்களின் தொழில்துறை வல்லுனர்களுடன் கலந்துரையாடினார்.புதிய தொழில்துறை தேவைகளுக்கேற்ப கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல்,கற்பித்தல் முறைகளை மாற்றுதல், மாணவர்களின் திறன்களைமேம்படுத்தல் குறித்து தொழில் வல்லுனர்கள் தங்கள் நுண்ணறிவுகளை பகிர்ந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி