உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.அப்போது, மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் குறித்தும், நோயாளிகளின் எண்ணிக்கை குறித்தும், டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு, 1936ம் ஆண்டு, நிலம் வழங்கிய, வெள்ளியங்கிரியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பிரசவ வார்டு, புற நோயாளிகள் பிரிவிற்கு சென்று, அங்கிருந்த, நோயாளிகளிடம், சிகிச்சை முறையாக அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன், எம்.பி., ஈஸ்வரன், மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.தொண்டாமுத்துார் அரசு மருத்துவமனையில், டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, ''விரைவில், டாக்டர்கள் நியமிக்கப்படுவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !