உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈஷாவின் மகாசிவராத்திரி கொண்டாட்டம் விழாவில் மிராக்கிள் ஆப் தி மைண்ட் செயலி அறிமுகம்

ஈஷாவின் மகாசிவராத்திரி கொண்டாட்டம் விழாவில் மிராக்கிள் ஆப் தி மைண்ட் செயலி அறிமுகம்

கோவை : ஈஷா யோகா மையம் சார்பில் வரும், 26ம் தேதி நடக்க உள்ள சிவராத்திரி விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாசி பாரகா கூறியதாவது: ஈஷாவில், 31வது மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் வரும், 26ம் தேதி நடக்கிறது. சிறப்பு விருந்தினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.மஹாசிவராத்திரி விழா ஆதியோகி முன், மாலை 6:00 முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை நடக்க உள்ளது. சத்குரு முன்னிலையில் நடக்கும் விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.'மிராக்கிள் ஆப் தி மைண்ட்' எனும் இலவச செயலியை, சத்குரு அறிமுகப்படுத்துகிறார். தினமும் ஏழு நிமிடங்கள் சத்குருவின் வழிக்காட்டுதலுடன், மக்கள் தியானம் செய்யும் வகையில், இந்த செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. விழாவுக்கு, பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தரவுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, 'பாரடாக்ஸ்' என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் - அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் இந்திய மொழிகளில் ஆன்மிகப் பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் வைரலான, ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.ஈஷா தன்னார்வலர்கள் கணேஷ் ரவீந்தரன், சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

'22 மொழிகளில் நேரலை'

விழா, நாடு முழுவதும் 100க்கு மேற்பட்ட இடங்களில் நேரலை செய்யப்படும். 11 இந்திய மொழிகள், 11 வெளிநாட்டு மொழிகள் என மொத்தம், 22 மொழிகளில் நேரலை செய்யப்பட உள்ளது. 150க்கும் மேற்பட்ட டி.வி., சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களிலும், இந்தியா முழுவதும், 100க்கும் அதிகமான பி.வி.ஆர்., ஐநாக்ஸ், தியேட்டர்கள், ஜியோ ஹாட்ஸ்டார், 'ஜீ' 5 ஆகிய ஓ.டி.டி., தளங்கள் மற்றும் பிக் 92.7, பீவர் ஆகிய எப்.எம்., களிலும், விழா நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை