உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காணாமல் போன சிறுவர்கள்; போலீசார் விசாரணை

காணாமல் போன சிறுவர்கள்; போலீசார் விசாரணை

உடுமலை : குடிமங்கலம் ஒன்றியம், பண்ணைக்கிணறு கிராமத்தைச்சேர்ந்த 5 சிறுவர்கள் நேற்று முன்தினம், அதே பகுதியில் விளையாடச்சென்றுள்ளனர். இதில், 3 சிறுவர்கள் வீட்டுக்கு திரும்பிய நிலையில், மிதுல்ராஜ்; 11; வினோத்; 12 மட்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.இதனால், பதட்டமடைந்த பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடியும் சிறுவர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, நேற்று குடிமங்கலம் போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். விளையாடச்சென்ற சிறுவர்கள் காணாமல் போன சம்பவம், அப்பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி