உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எம்.பில்., பி.எச்டி., எழுத்து தேர்வு 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்.பில்., பி.எச்டி., எழுத்து தேர்வு 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி;பாரதியார் பல்கலை எம்.பில்., பி.எச்டி., (பகுதி-1) மாணவர்களுக்கான எழுத்து தேர்வுகள், ஜூலை மாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வுகள், ஜூலை 2, 4, 6 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. பங்கேற்க தகுதியுள்ளவர்கள் கட்டணத்தொகையை, மே 15ம் தேதிக்குள் அபராதம் இல்லாமலும், 18ம் தேதி வரை அபராதத்துடனும் செலுத்தலாம்.தேர்வுக்கான கட்டணம், ரூ.2,000 செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, மே 21ம் தேதி வரை, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.தேர்வு மையங்கள், பிற விபரங்களை மாணவர்கள், www.b-u.ac.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ