| ADDED : ஜூன் 05, 2024 01:33 AM
கிணத்துக்கடவு;விளை பயிர்களில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த, பல பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும் என, இயற்கை விவசாயி வலியுறுத்தியுள்ளார்.கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், அதிகளவில் காய்கறிகள் மற்றும் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், பயிர்களில் காணப்படும் பூச்சிகளை கட்டுப்படுத்த பல பயிர்கள் சாகுபடி விவசாய முறையை பின் பற்ற வேண்டும் என, இயற்கை விவசாயி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.பெரும்பாலான விவசாயிகள் அவர்கள் நிலத்தில், ஒரே வகையான பயிரையே பயிரிட்டு தொடர்ந்து சாகுபடி செய்கின்றனர். அதில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும். இதை தவிர்க்க பல பயிர் சாகுபடி முறையை மேற்கொள்வது சிறந்ததாகும். ஒரு பயிரில் இருக்கும் பூச்சி மற்ற பயிரில் இருக்காது. உதாரணமாக, மக்காச்சோளத்துக்கு வரும் பூச்சிகள், தக்காளிக்கு வராது.பல பயிர்கள் சாகுபடி முறையால், பூச்சிகள் உணவு கிடைக்காமல் இறந்து போகும். இதில், சில பூச்சிகள் அனைத்து பயிரையும் உட்கொள்ளும் திறன் கொண்டவைகளாகவும் இருக்கும்.இந்த சமயத்தில் பூச்சி கொல்லி மருந்து தெளிக்கின்றனர். இப்படி செய்தால் செடிகளை தாக்கும் தீமை செய்யும் பூச்சிகள் அழிந்துவிடுகிறது. இதற்கு மாற்றாக பூச்சி விரட்டியை பயன்படுத்த வேண்டும்.ரசாயன பூச்சிக்கொல்லியை தவிர்த்தால், காய்கறிகள், பயிர்கள் நஞ்சின்றி விளைவிப்பதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாப்பாக இருக்கும், என, அறிவுறுத்தினார்.