உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய டெங்கு ஒழிப்பு தினம் சுகாதார துறைக்கு மாஸ் கிளினிங் உத்தரவு

தேசிய டெங்கு ஒழிப்பு தினம் சுகாதார துறைக்கு மாஸ் கிளினிங் உத்தரவு

கோவை:தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, அனைத்து நிறுவனங்களும் 'மாஸ் கிளினிங்' மேற்கொள்ள சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி கொசு உற்பத்தி துவங்கியுள்ளது. இதன் காரணமாக டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.இதைக் கருத்தில் கொண்டு டெங்கு தடுப்பு பணிகளை தற்போதே துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும், தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், இன்று தேசிய டெங்கு ஒழிப்பு தினம். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும், அரசு நிறுவனங்கள் மாஸ் கிளினிங் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அரசு நிறுவனங்கள் தவிர, தனியார் நிறுவனங்களும் இந்த மாஸ் கிளினிங்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களை பொருத்தவரை, மாவட்ட சுகாதார துறை வாயிலாக மாஸ் கிளினிங் மேற்கொள்ளப்பட உள்ளது.''இதன் வாயிலாக, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை ஒரே கட்டத்தில் ஒழிக்க முடியும். அதைக் கருத்தில் கொண்டே அனைவரும் இதை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ