உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய ரோல்பால் போட்டி  கோவை மாணவியர் அசத்தல் 

தேசிய ரோல்பால் போட்டி  கோவை மாணவியர் அசத்தல் 

கோவை : மேகாலயாவில் நடந்த தேசிய அளவிலான சீனியர் ரோல்பால் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக அணியில் கோவையை சேர்ந்த வீராங்கனையினர் அசத்தினர். ரோல்பால் பெடரேஷன் ஆப் இந்தியா, மேகாலயா ரோல் பால் சங்கம் சார்பில் 4வது ரோல்பால் பெடரேஷன் கோப்பைக்காக தேசிய போட்டி மேகாலயா மாநிலத்தில் உள்ள சில்லாங் நகரில் நடந்தது. இதில் கடந்த ஆண்டு நடந்த தேசிய போட்டியில் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்த போட்டியின், லீக் சுற்றில் சிறப்பாக விளையாடிய தமிழக அணி அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் உத்தர பிரதேசம் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய தமிழக அணி, இறுதிப்போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 6 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றியை நழுவ விட்டது. இதனால், வெள்ளிப்பதக்கம் வென்றது. வெள்ளி வென்ற தமிழக அணியில் கோவையை சேர்ந்த மகதி, நேகா, ஸ்மிதா, ராஜஸ்ரீ, சிபிஷா ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினர். வெற்றி பெற்ற வீராங்கனையினரை தென்னிந்தியா ரோல்பால் சங்க செயலாளர் சுப்ரமணியன், மாநில செயலாளர் கோவிந்தராஜ், பயிற்சியாளர்கள் ராஜசேகர், பிரேம்நாத் ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை