உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை கோவிலுக்கு புதிய துணை கமிஷனர்

மருதமலை கோவிலுக்கு புதிய துணை கமிஷனர்

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, புதிய துணை கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார்.முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், 2022ம் ஆண்டு முதல் துணை கமிஷனராக ஹர்சினி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஹர்ஷினி, திருப்பூர் மாவட்டம், நகை சரிபார்ப்பு துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் நகை சரிபார்ப்பு துணை ஆணையராக பணியாற்றி வரும் செந்தில்குமார், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனராகவும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ