ரயில்வே ஸ்டேஷனில் புதிய லிப்ட் துவக்கம்
கோவை: கோவை ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளுக்கு லிப்ட் வசதி துவக்கி வைக்கப்பட்டது.கோவை ரயில்வே ஸ்டேஷனை தினமும், பல ஆயிரம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷனில், பிளாட்பாரம், 5 மற்றும் 6 ல், லிப்ட் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான நிதி ஒதுக்கி, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்து, நேற்று ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் சச்சின்குமார், லிப்டை துவக்கி வைத்தார். மேலாளர் ஸ்ரீதரன், துணை மேலாளர் சதீஷ்சகாதேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.