உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளலுாருக்கு புது போஸ்ட்மாஸ்டர்

வெள்ளலுாருக்கு புது போஸ்ட்மாஸ்டர்

கோவை;வெள்ளலுார் துணை தபால் நிலையத்தில், புதிய 'போஸ்ட்மாஸ்டர்' பொறுப்பேற்றுக்கொண்டார்.கோவை கோட்டத்தில் தபால் அலுவலர்கள், தபால்காரர் என அதிபட்சமாக கடந்த மே 31ம் தேதி, 12 பேர் பணி ஓய்வு பெற்றனர். இதில், வெள்ளலுார் துணை தபால் நிலையத்தில், 'போஸ்ட்மாஸ்டர்' ஆக பணிபுரிந்த நளினியும் ஒருவர்.காலியாக இருந்த இப்பணியிடத்துக்கு, உக்கடம் துணை தபால் நிலையத்தில் போஸ்ட்மாஸ்டராக பணிபுரிந்த தண்டாயுதபாணி நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பேற்றுக்கொண்ட தண்டாயுதபாணிக்கு தபால் அலுவலர்கள், போஸ்ட்மேன்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !