உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய ரயில் சேவை! பெருநகரங்களுக்கு செல்ல அவசிய தேவை; ரயில்வே நிர்வாகத்தினருக்கு தொடர் மனு

புதிய ரயில் சேவை! பெருநகரங்களுக்கு செல்ல அவசிய தேவை; ரயில்வே நிர்வாகத்தினருக்கு தொடர் மனு

பொள்ளாச்சி : பெள்ளாச்சி மார்க்கமாக, மதுரை - சென்னை மற்றும் திண்டுக்கல் -ஈரோடு இடையே புதிய ரயில் சேவையை துவக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில், பொள்ளாச்சி ரயில் சந்திப்பு அமைந்துள்ளது. கடந்த, 2008ல், போத்தனுார் - பொள்ளாச்சி, பொள்ளாச்சி - திண்டுக்கல் வரை, மீட்டர் கேஜ் பாதை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி துவங்கியது.பணிகள் நிறைவு பெற்ற பிறகு, 2015ல், அகல ரயில் பாதையில், ரயில்சேவை துவங்கியது. தற்போது இயக்கப்படும் ரயில்களை பல ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில்,பொள்ளாச்சி சுற்றுப்பகுதி பயணியர் நலனுக்காக பெருநகரங்களுக்கான ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.இது தொடர்பாக, பொள்ளாச்சி ரயில் பயணியர் நல சங்கத்தினர், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் சென்னை தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு மனுவும் அனுப்பியுள்ளனர்.மனு விபரம்: பொள்ளாச்சி, உடுமலை வருவாய் கோட்டத்தில், தென்னை விவசாயம் மற்றும் தென்னை நார் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன.மேலும், வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால், அதிகப்படியான மக்கள், தொழில் சார்ந்து, சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு சென்று திரும்புகின்றனர்.அவ்வகையில், மதுரையில் இருந்து, பழநி, பொள்ளாச்சி, கோவை, ஈரோடு மார்க்கமான சென்னைக்கு புதிய ரயில் சேவை துவக்க வேண்டும்.குறிப்பாக, மதுரையில் இரவு, 7:00 மணிக்கு புறப்படும் ரயில், 9:00 மணிக்கு பழநி, 10:30 மணிக்கு பொள்ளாச்சி, 11:40 மணிக்கு கோவை, அடுத்த நாள் காலை, 8:00 மணிக்கு சென்னை சென்றடைய வேண்டும்.இதேபோல, சென்னையில், இரவு, 9:30 மணிக்கு புறப்படும் அந்த ரயில், அடுத்த நாள் காலை, 5:30 மணிக்கு கோவை, 6:30 மணிக்கு பொள்ளாச்சி, 8:00 மணிக்கு பழநி, காலை, 10:00 மணிக்கு மதுரை சென்றடைய வேண்டும்.மேலும், திண்டுக்கல் - ஈரோடு இடையே பொள்ளாச்சி மார்க்கமாக புதிய ரயில் சேவை துவக்க வேண்டும். அதன்படி, காலை, 5:00 மணிக்கு திண்டுக்கல்லில் ரயில் புறப்பட்டால், 6:15 மணிக்கு பழநி, 7:30 மணிக்கு பொள்ளாச்சி, 8:40 மணிக்கு கோவை, 9:40 மணிக்கு திருப்பூர், 11:00 மணிக்கு ஈரோடு சென்றடைய வேண்டும்.இதேபோல, மாலை, 4:15 மணிக்கு ஈரோட்டில் ரயில் புறப்பட்டால், 5:30 மணிக்கு திருப்பூர், 6:40 மணிக்கு கோவை, 7:30 மணிக்கு பொள்ளாச்சி, 8:50 மணிக்கு பழநி, 10:30 மணிக்கு திண்டுக்கல் சென்றடைய வேண்டும். இதனால், அதிகப்படியான மக்கள் பயனடைவர்கள். இவ்வாறு, அந்த மனுவில் இருந்தது.இத்தகைய ரயில்சேவைகளை அதிகரிக்கும் போது, பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பயணியர் பயன்பெறுவார்கள்; ரயில்வேக்கும் வருவாய் அதிகரிக்கும். தமிழக-கேரள எல்லையோர பகுதி மக்களுக்கும் இந்த ரயில்கள் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை